×

தென்மேற்கு பருவமழை பொய்த்தது பஞ்சலிங்க அருவி வறண்டது; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

உடுமலை : உடுமலையில் இருந்து சுமார் 22 கிமீ., தொலைவில் திருமூர்த்திமலை உள்ளது. இங்கு புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

உடுமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராள மானோர் வருகின்றனர். குறிப்பாக, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், ஆடிப்பெருக்கு தினமான நேற்று திருமூர்த்திமலைக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்தனர். 3 நாள் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர்.

ஆனால் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் பஞ்சலிங்க அருவியில் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது.வனத்துறையினர் அருவிக்கு செல்ல அனுமதிக்கவே, 800 மீட்டர் தூரம் மலையில் கால்கடுக்க நடந்து சென்றவர்கள், அருவியில் குளிக்க தண்ணீரின்றி காட்சி அளித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Tags : Panchlinga lake ,Udumalai ,Udumala ,Thirumurthimalai ,Amanalingeshwarar Temple ,Udumali ,
× RELATED சட்டமன்றம் கூடும்போது எதிர்க்கட்சித்...