×

498ஏ சட்டத்திற்கு திருமணம் அவசியம் இல்லை லிவ்-இன் ரிலேஷன் உறவிலும் குடும்ப வன்முறை பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி

 

புதுடெல்லி: இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498ஏ ஒரு பெண்ணின் கணவர் அல்லது அவரது உறவினர்களால் அப்பெண் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதைக் குறிப்பிடுகிறது. ‘லிவ்-இன்’ உறவில் இருக்கும் ஒரு நபர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம், 1860இன் பிரிவு 498ஏ-இன் கீழ் வழக்குத் தொடர முடியுமா என்பது தொடர்பான மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என். கோதிஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அளித்த உத்தரவு: கணவர் அல்லது அவரது உறவினர்களால் இழைக்கப்படும் கொடுமை தொடர்பான 498ஏ பிரிவு, திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்துடன் கூடிய ‘லிவ்-இன்’ உறவில் (திருமணம் சாராத இணைவாழ்வு) உள்ளவர்களுக்கும் பொருந்தும். லிவ்-இன் உறவுகள் இன்று ஒரு யதார்த்தமாகிவிட்டன. எனவே திருமண உறவைப் போன்ற தன்மையைக் கொண்ட ‘லிவ்-இன்’ உறவில், ஒரு பெண் கொடுமைக்கு உள்ளாக்கப்படும்போது, ​​அந்த ஆணின் மீது வழக்குத் தொடர முடியும். எனவே ‘லிவ்-இன்’ உறவுகளுக்குப் பிரிவு 498 ஏபொருந்தும். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,New Delhi ,
× RELATED எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தால்...