மதுரை: மேலூர் அருகே தனியாமங்கலத்தில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்துபோன கார் ஓட்டுநரின் விவரங்கள் குறித்து மேலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
