சிவகாசியில் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் மேற்கொள்ளும் அச்சுறுத்தல்கள் கண்டனத்துக்குரியவை என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் தேவையற்ற சோதனைகள் காரணமாக பட்டாசு ஆலை உரிமையாளர்களிடையே அச்சமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆய்வு என்ற பெயரில் நடைபெறும் கெடுபிடிகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
