×

மந்தகதியில் நடக்கும் சென்னை பிராட்வே ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்.? பொதுமக்கள் அதிருப்தி

சென்னை பிராட்வே ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் ரூ.222 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில், அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஒன்பது தளங்களைக் கொண்ட புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் 10 தளங்களைக் கொண்ட குறளகம் கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு, கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிற்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் பிராட்வே ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் கூடம், சில்லறை வணிகத் தளங்கள், நவீன கழிப்பறைகள், வெளிப்புற நடைமேம்பாலங்கள், அலுவலகப் பகுதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிட வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திமுக ஆட்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்தப் பணி, பின்னர் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மந்தகதியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு வேகமாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் அனைத்தும் தற்போதைய ஆட்சியில் வேண்டுமென்றே முடக்கப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களின் நலன் கருதி, எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இன்றி திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Chennai ,Chennai Broadway ,
× RELATED பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் கைதான 4 பேரை சிறையில் அடைக்க உத்தரவு