×

நடப்பாண்டில் 3-ஆம் முறையாக உயரப் போகும் அத்தியாவசியப் பொருட்களின் விலை.!! மக்கள் அதிர்ச்சி…

டெல்லி: மேற்காசியாவில் நீடிக்கும் போர் பதற்றம் காரணமாக டிவி-க்கள், கார்கள், ஆடைகள் மற்றும் உணவு பொருட்களின் விலை விரவில் உயரப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேற்காசியா போர் பதற்றம் காரணமாக சரக்கு போக்குவரத்து கட்டணம் உயர்ந்துள்ளதுடன், மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடும் அதிகரித்து உள்ளது.

இதனால் நடப்பாண்டில் மூன்றாம் முறையாக வரும் ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டீ, தேங்காய் எண்ணெய், ஆடைகள், தோல் பொருட்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவற்றின் விலை 6 முதல் 8 சதவீதம் வரை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

அதே போல டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றின் விலை 4 முதல் 6 சதவீதம் வரை உயரும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. நடப்பாண்டில் ஏற்கனவே 10 சதவீதம் முதல் பல பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 சதவீதம் வரை பொருட்களின் விலைகள் உயர கூடும் என்ற தகவல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களின் விலையை ரூ.30,000 வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. உணவு பொருட்கள் உள்ளிட்ட அதிகமாக விற்பனையாகும் பொருட்களின் விலை 3 முதல் 5 சதவீதமும், கார்களின் விலை 1 முதல் 3 சதவீதமும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடைகள் மற்றும் தோல் பொருட்களின் விலை கணிசமாக அதிகரிக்கும் என தொழில்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Tags : Delhi ,West Asia ,
× RELATED மாணவர்களின் போராட்டத்தை நினைத்து...