×

ஆண்டாங்கோயில் பகுதியில் மலைபோல் குவிந்த குப்பை மேடு

*தினமும் அகற்ற மக்கள் எதிர்பார்ப்பு

கரூர் : கரூர் மாவட்டம் ஆண்டாங்கோயில் கீழ் பாகம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் ஆண்டாங்கோயில் கீழ்பாகம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

இந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஓரிடத்தில் மொத்தமாக கொட்டி வைக்கப்படுகிறது.அவ்வப்போது அந்த பகுதியில் இருந்து குப்பைகள் அள்ளப்படாத காரணத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

எனவே, இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அள்ளுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

துறை அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு குப்பைகள் தேங்காத வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Andangoil ,Karur ,Karur district ,
× RELATED சென்னை கொளத்தூர் தொகுதிக்கான...