×

கனிமங்களை கொண்டு செல்ல நிரந்தர தடை வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

 

சென்னை: கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் நெல்லை, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு மிகப்பெரிய அளவில் கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளி மாநிலங்களுக்கு கனிமங்களை கடத்திச் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை முழு அளவில் செயல்படுத்தப்பட வேண்டும். இப்போது 3 மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கான தடையை நிரந்தர தடையாக மாற்ற வேண்டும்.
கனிம கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Pamaka ,Anbumani ,Chennai ,President ,Kerala ,
× RELATED பொள்ளாச்சி சிடிசி மேடு பகுதியில்...