- அமைச்சர்
- நிர்மல் குமார்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வத்ஷ்வா
- சக்தி
- புரிந்துணர்வு
- தமிழ்நாடு மின்சார வாரியம்
- ஐஐடி சென்னை
சென்னை: தமிழ்நாட்டில் ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அந்தஸ்து கொடுக்காததால் பட்டமளிப்பு விழாவை அமைச்சர்கள் புறக்கணித்தனர் என எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் ஐஐடி சென்னை இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக நேற்று ஐஐடி சென்னை வளாகத்திற்கு நேரில் சென்று பல்வேறு நவீன மின்சார தொழில்நுட்பங்களை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி பசுமை எரிசக்தி மாநிலமாக மாற்றும் நோக்கில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகத்தரத்திலான மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) மற்றும் பேட்டரி மறுசுழற்சி தொடர்பான விரிவான புதிய கொள்கை, ஐஐடி சென்னை நிபுணர்களுடன் இணைந்து விரைவில் வெளியிடப்படும்.
மின்கட்டமைப்பின் தேவையை கருத்தில் கொண்டு, லோட் ப்லோ (Load Flow) ஆய்வின் அடிப்படையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு வெளிப்படையான மற்றும் அறிவியல் சார்ந்த அனுமதி நடைமுறை செயல்படுத்தப்படும். வட மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிக்கான பாடலுக்கு அந்தஸ்து கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அந்தஸ்து கொடுக்காததால் பல்கலை பட்டமளிப்பு விழாவை அமைச்சர்கள் புறக்கணித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
