×

மசினகுடி பகுதியில் பாகற்காய் பயிரிடும் பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

ஊட்டி : ஊட்டி மசினகுடி மற்றும் வாழைத்தோட்டம் பகுதிகளில் விவசாயிகள் பாகற்காய் பயிரிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பெரும்பான்மையாக மேற்கொள்ளப்பட்டாலும்,சமவெளி பகுதிகளை போன்று வெயிலான காலநிலை நிலவக்கூடிய மசினகுடி, பொக்காபுரம்,வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பஜ்ஜி மிளகாய், பாகற்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளும், மேரிகோல்டு எனப்படும் செண்டுமல்லி பூக்களும் விளைவிக்கப்படுவது வழக்கம். நன்கு விளைந்த காய்கறிகள் ஊட்டி, கூடலூர் பகுதிகள் அல்லது அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி அருகேயுள்ள வாழைத்தோட்டம், மாவனல்லா, மாயார் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் தற்போது பாகற்காய் பயிரிடப்பட்டுள்ளது. நிலம் சமன்படுத்தி அங்கு பந்தல் அமைத்து பாகற்காய் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இவை பூக்கள் விட்டுள்ளன. ஓரிரு வாரங்களில் காய்க்க துவங்கி விடும். இவற்றை காலை, மாலை இரு வேளைகள் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Masinakudi ,Ooty ,Banana ,Nilgiris district ,Bokkapuram ,
× RELATED பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் மோதியதில் 9 ஆடுகள் பலி