×

வினாத்தாள் கசிவை தடுக்க தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டால் 10 வருட சிறை; ரூ.10 கோடி அபராதம்: சட்ட திருத்தத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: நீட் மற்றும் இதர பொதுத் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகளைத் தண்டிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தும் போராட்டங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இந்த நிலையில், பொது தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டம் 2024ல் திருத்தங்களை கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2024ல் நீட் மற்றும் நெட் தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவு ஏற்பட்டதால் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

வினாத்தாள் கசிவு போன்ற பிரச்னைகளை தொடர்ந்து ஒன்றிய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அந்த சட்டத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். அதற்கு முன் வினாத்தாள் மோசடிகளை தடுக்க எந்த ஒரு சட்டமும் இல்லை. இந்த நிலையில் வினாத்தாள் கசிவை தடுக்கும் விதமாக , கடும் சிறைத்தண்டனை, அதிக அபராதங்களை உள்ளடக்கிய புதிய மசோதாவை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக பொதுத் தேர்வுகள்( முறைகேடு தடுப்பு) சட்டம், 2024-ல் திருத்தங்களை மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே உள்ள சட்டத்தில், தேர்வு முறைகேட்டில் ஈடுபடும் தனிநபர்களுக்கு தற்போது விதிக்கப்படும் 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பதிலாக 5 ஆண்டு சிறை தண்டனை, திட்டமிட்ட குற்றங்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனைக்கு பதிலாக 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.1 கோடி அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.

இந்த மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது என வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவில் தேர்வு வினாத்தாள் கசிவை தடுக்க கடுமையான சட்டம் அமல்படுத்தப்படும். இதற்கான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

Tags : Union Cabinet ,New Delhi ,NEET ,Modi ,
× RELATED மாணவர்கள் போராட்டத்தின் முக்கிய...