×

குஜராத் கனமழைக்கு 5 பேர் பலி

அகமதாபாத்: குஜராத்தின் பல பகுதிகளில் நேற்று பெய்த பலத்த மழைக்கு 5 பேர் பலியாகி விட்டனர். குஜராத் மாநிலத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ராணுவம் மற்றும் கடலோரக் காவல் படை உள்ளிட்ட அமைப்புகளின் உதவியுடன் தீவிர மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் 40,500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 2,637 பேர் மீட்கப்பட்டனர். அதேவேளையில், மழையால் 5 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கேடா மாவட்டத்தின் மெஹ்மதாபாத் பகுதியில் அதிகபட்சமாக 507 மி.மீ மழையும், அகமதாபாத்தின் டோல்கா 473 மி.மீ , நவ்சாரியின் சிக்லி 451 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Tags : Gujarat ,Ahmedabad ,Coast Guard… ,
× RELATED மாணவர்கள் போராட்டத்தின் முக்கிய...