×

ஒரத்தநாடு அருகே ஊரணிபுரத்தில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

 

ஒரத்தநாடு, ஜூலை 23: ஒரத்தநாடு அருகே ஊரணிபுரத்தில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரத்தில் ஒன்றிய பாஜ அரசின் அடக்குமுறை, அத்துமீறலை கண்டித்தும், டெல்லியில் நடைபெற்ற நீட் எதிர்ப்புக்கான மாணவர்களின் போராட்டம் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவத்தினரை வைத்து தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவோணம் ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை
எழுப்பினர்.

Tags : CPM ,BJP government ,Oranipuram ,Orathanadu ,Communist Party of India ,Marxist ,Thiruvonam ,Thanjavur district, Delhi… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...