×

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயற்சி; கரப்பான் கட்சியினர்-காவல் துறை இடையே தள்ளுமுள்ளு

 

டெல்லி: டெல்லியில் ஜந்தர் மந்தரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே நாடாளுமன்றம் நோக்கி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இன்று பேரணி செல்ல திட்டமிட்டுள்ளனர். நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி ஜந்தர்,விஜய் சவுக், இந்தியா கேட், அமைச்சர்கள் குடியிருப்பு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜன்பத், ராஜீவ் சௌவ், பட்டேல் சௌக் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கு பேரணி செல்ல முயன்றதால் கரப்பான் கட்சியினர்-காவல் துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. போலீஸ் வைத்திருந்த தடுப்புகளை மீறி பேரணியாக செல்ல கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் முயற்சி செய்தனர். தடுப்புகளை மீறி வருபவர்களை காவல் துறையினர் போலீஸ் வாகனத்தில் ஏற்றி வருகின்றனர்

Tags : Parliament ,cockroach ,Delhi ,Jantar Mantar ,cockroach Janata Party ,
× RELATED ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர...