கேரளா: உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை முன்னிட்டு நாளை கேரளத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்றாலும், தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் கால்பந்து ரசிகர்கள் அதிகம் என்பதால் பல்வேறு தரப்பில் விடுமுறை வழங்க கோரிக்கை விடுத்தனர். கடற்கரை உள்ளிட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் மூலம் கால்பந்து போட்டியை ரசிகர்கள் காண ஏற்பாடு செய்துள்ளனர்.
