×

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; ராயன், அமரன், மகாராஜா, பிரமயுகம், Article 370′ ஆகிய படங்களுக்கு விருதுகள் அறிவிப்பு

 

டெல்லி: 2024-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்தனர். சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் உள்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த ஒலிக்கலவைக்கான விருது ப்ளூ படத்திற்காக ஹரிஹர சுதனுக்கு அறிவித்தது.

சிறந்த திரைப்படமாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2024ம் ஆண்டு வெளியான ராயன் திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் மில்லர் படத்தில் நடித்த தனுஷுக்கு சிறப்பு விருது; சிறந்த ஒலிக்கலவைக்கான சிறப்பு விருது மெய்யழகன் படத்திற்கு அறிவிப்பு; சிறந்த ஆவணப் பட ஒலி வடிவமைப்புக்கான விருது ப்ளூ படத்திற்காக ஹரிஹர சுதனுக்கு அறிவிப்பு

அமரன் படத்துக்கு சிறந்த எடிட்டிங் விருது வழங்கப்பட்டுள்ளது; பின்னணி இசைக்கான தேசிய விருதும் அமரன் படத்துக்கு வழங்கப்பட்டது. அமரன் பட எடிட்டர் கலைவாணனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமரன் படத்துக்காக சிறந்த இயக்குனராக ராஜ்குமார் பெரியசாமிக்கு தேசிய விருது அறிவிப்பு

மகாராஜா படத்திகு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருது மகாராஜா படத்திற்காக அனல் அரசுக்கு அறிவிப்பு. மகாராஜா படத்தில் நடித்த துணை நடிகை விருது சச்னா நமிதாஸுக்கு அறிவிப்பு

மம்முட்டி நடித்த பிரமயுகம் படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது அறிவிப்பு; வைக்கம் விஜயலட்சுமிக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது அறிவிப்பு

அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான (சிறப்பு விருது) தேசிய விருது அறிவிப்பு; தேசியம், சமூக சிந்தனையை ஊக்குவித்ததற்கான விருது கேப்டன் மில்லர் படத்துக்கு அறிவிப்பு

சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கிய ‘Article 370’ திரைப்படம் பெற்றது. சந்து சாம்பியன் படத்தில் நடித்த கார்த்தி ஆரியனுக்கு சிறந்த நடிகர் விருது அறிவிப்பு. வீர்சாவர்க்கர் படத்தை இயக்கிய நடிகர் ரந்தீப் ஹூடா-வுக்கு அறிமுக இயக்குநருக்கான விருது அறிவிப்பு. நடிகை யாமி கௌதம்-க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags : National Film Awards ,Rayan ,Amaran ,Maharaja ,Pramayugam ,Delhi ,72nd National Film Awards ,Harihara Sudhanu ,
× RELATED தயக்கத்தை விடுங்கள்; AI...