- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கனிமொழி
- சென்னை
- தமிழ்நாடு தினம்
- தலைமை பொருளாதார நிபுணர்
- அண்ணா
- சென்னை மாகாணம்
சென்னை: தமிழ்நாடு நாள் ஆண்டுதோறும் ஜூலை 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. 1967-ம் ஆண்டு இதே நாளில், அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்னை மாகாணத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றுவதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் அடிப்படையில், மெட்ராஸ் மாகாணம் 1956 நவம்பர் 1-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடத் தமிழ்நாடு அரசு 2019-இல் அரசாணை வெளியிட்டது. நவம்பர் 1-ந்தேதி கொண்டாடப்பட்ட நிலையில், 2022 முதல் ஜூலை 18 தமிழ்நாடு நாளாக அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது.
இந்நிலையில், ஜூலை 18-ந்தேதியான இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
எண்ணில்லா போராட்டங்களாலும், விலை மதிப்பில்லா உயிர்த் தியாகங்களாலும், நம் அன்னைத் தமிழ் நிலத்தின் பெயரை மீட்டளித்திட்ட நாள் இது. நம் கழகம் பெற்ற அதிகாரத்தால், நம் தாய்நிலம் தலைநிமிர்ந்து, தெற்கிலிருந்து தொடங்கும் இத்துணைக் கண்டத்தின் வரலாற்றை முழங்கும் இனமானச் சொல்லாக நிலைப்பெற்றுவிட்டது, நம் தமிழ்நாடு!
பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய இந்நாளில், மாநில உரிமைகளைக் காத்திட உறுதிகொள்வோம்.
“தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்!
இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.
