×

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

கோபி, ஜூலை 18: கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில்,ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதி நாராயண பெருமாள் கோயில், பச்சமலை சுப்பிரமணிய சாமி கோயில், பொளமலை முத்துகுமார சாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி வெள்ளியை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சாமி சிலைகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய கோபி மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வரவே, கோயிலின் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

 

Tags : Pariyur Kondathu Kaliamman Temple ,Gopi ,Sridevi Bhoodevi Sametha Adhi Narayana ,Perumal ,Temple ,Pachamalai Subramaniam Swamy ,Polamalai Muthukumara Swamy Temple ,
× RELATED பெருந்துறை அருகே போதையில் மயங்கி கிடந்த டிரைவர் சாவு