×

சாலையோர வியாபாரிகளுடன் ஆலோசனை

ஈரோடு, ஜூலை 15: ஈரோடு மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலக கூட்டரங்களில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாநகராட்சி உதவி ஆணையாளர் (வருவாய் பிரிவு) கார்த்திகேயன், நகர திட்டமிடுநர் மதியழகன், உதவி நகர திட்டமிடுநர் ஹேமலதா ஆகியோர் தலைமை வகித்தனர்.  இதில், பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை வழிமறித்து கடைகள் போடக்கூடாது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சாலையோர கடைகளை அமைக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மேலும், சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடனை பெறுவதற்கும், வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கும் மாநகராட்சியினை அணுகி விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்துள்ளவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருவது குறித்து சாலையோர வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

 

Tags : Erode ,Erode Corporation ,Karthikeyan ,Mathiyazhagan ,Hemalatha… ,
× RELATED 15 தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பறிமுதல்