×

15 தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பறிமுதல்

பெருந்துறை, ஜூலை 14: பெருந்துறையில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பொருத்திய 15 பஸ்களுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.பெருந்துறை வழியாக பல்வேறு நகரங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான தனியார் பஸ்கள் மற்றும் சிப்காட் தொழிற்சாலைக்கும் பஸ்கள் சென்று வருகிறது.‌ இதில் பல பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக ஒலி எழுப்பிய படி சென்று வந்தது. இதனால், இந்த பஸ்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்துறை ஆர்டிஓ மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலையில் பெருந்துறை பஸ் நிலையத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், ஆர்டிஓ, மோட்டார் இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் மேற்பார்வையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மற்றும் சிப்காட்டிற்கு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் பஸ் என 15 பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் பொருத்தப்பட்டு இருந்ததை கண்டறிந்து அகற்றினார்கள்.
மேலும் அந்த ஒவ்வொரு பஸ்களுக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் 15 பஸ்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. வாகன சோதனையில் போக்குவரத்து எஸ்ஐ நாகராஜன் மற்றும் போக்குவரத்து போலீசார் ஆர்டிஓ அலுவலர்கள் ஈடுபட்டனர்.

Tags : Perundurai ,Chipcott ,
× RELATED சித்தோடு அடுத்துள்ள முத்தாங்காட்டில்...