×

கருப்பூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவு நீர்

அறந்தாங்கி, ஜூலை 15: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கருப்பூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவு நீரால் தொற்று ஏற்படும் அபாயம் உடனே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கருப்பூர் கிராமத்தில் பிரதான சாலை ஓரமாக செல்லும் வாய்க்காலில் கழிவுநீர்கள் தண்ணீர் செல்லும் வாய்க்காலில் தேங்கி கிடக்கிறது.

தற்போது அந்த தண்ணீர் வாய்காலில் தண்ணீர் வராததால் கழிவுநீர் தேங்கி அதில் கொசு உற்பத்தியாகி அந்த பகுதியில் கொசு அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது. தேங்கி கிடக்கும் இந்த கழிவு நீரால் தொற்று நோய் உருவாக வாய்ப்பு உள்ளதால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனே சாலையின் ஓரத்தில் தேங்கி கிடக்கும் கழிவு நீரை உடனே அப்புறபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 

 

Tags : Karuppur village ,Aranthangi ,Karuppur ,Avudaiyar Kovil taluka ,Pudukkottai district ,
× RELATED தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதியில் 18ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்