×

குரங்கணி கோயிலில் ஆனித்திருவிழா

 

ஸ்ரீவைகுண்டம், ஜூலை 15: பிரசித்திப் பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா, கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வந்தது. நேற்று சிகர நிகழ்ச்சியான திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இன்று அதிகாலை 1 மணிக்கு ஆனிப் பெருந்திருவிழா சிறப்பு பூஜை, 2 மணிக்கு நாராயண சுவாமி பெரிய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் வசதிக்காக நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குரங்கணிக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து திருவிழா சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

 

Tags : Anithuruvijaya ,Kurangani Temple ,Srivaikundam ,Kurangani Muthumalai Amman Temple ,
× RELATED பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டி: இலுப்பையூர் அணி சாம்பியன்