×

ஈரானில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

 

டெஹ்ரான்: ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த ஐஎஸ் அமைப்பு ஈரானுக்குள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஈரான் எல்லைக்கு அருகே பாமோ மலைப் பகுதியில் அதன் மறைவிடத்தை ஈரான் பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். அங்கு நடந்த சண்டையில் ஈரான் புரட்சிகர காவல் படையை சேர்ந்த 3 வீரர்கள் பலியாகினர். பல கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்ட நிலையில், 2 பேர் சிக்கினர். ஈரான் அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் அரசு நேற்று அறிவித்தது.

Tags : Iran ,ISIS ,Tehran ,Bamo Mountains ,Iraq ,Syria ,Revolutionary Guards… ,
× RELATED ஹோர்முஸ் நீரிணையை கடக்கும்...