×

அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

 

காஞ்சிபுரம், ஜூலை 15: காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக காரப்பேட்டை, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள அறுவை சிகிச்சை அரங்க தொழில்நுட்ப வல்லுநர், தொழில்சார் சிகிச்சையாளர், கிருமி நீக்கப் பணியாளர் தொழில்நுட்ப உதவியாளர், ரத்த வங்கி ஆலோசகர், அலுவலக உதவியாளர், ஆண்/பெண் செவிலியர் உதவியாளர், சலவையாளர், உணவியல் நிபுணர் மற்றும் கதிரியக்க நிபுணர் ஆகிய காலிப்பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவமானது http://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் வரும் 23ம் தேதி மாலை 5.45 மணிக்குள், நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42A, ரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம் 631 501 என்ற அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளளார்.

 

Tags : Anna Memorial Cancer Hospital ,Kanchipuram ,Kanchipuram District ,District Welfare Association ,Arignar Anna Memorial Cancer Hospital ,Karapetta… ,
× RELATED காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில்...