- ரகு-கெடு இடங்கள்
- சென்னை
- திருப்பதி
- திருக்காளத்தி
- Raku
- — கெது தலாம்
- இறைவன்
- கலாத்தினதர்
- ராஹு பவானா
- அம்மா ஞானாபுங்கோட்டி
- கெடு பவானா
- மயிலாடுதுறை
- சிர்காசி
* சென்னையிலிருந்து 110 கி.மீ., திருப்பதியிலிருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ளது காளஹஸ்தி. இது புகழ்பெற்ற ராகு – கேது தலமாகும். இறைவன், காளத்திநாதர் (ராகு பாவனை) அம்மை ஞானப்பூங்கோதை (கேது பாவனை)
* மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து கீழ்ப்பெரும்பள்ளம் தலத்தை அடையலாம். மூலவர் நாகேஸ்வரர். கேது பகவானுக்குரிய பரிகார தலம் இது.
* கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ., தொலைவில் உள்ளது, திருநாகேஸ்வரம். நாகேஸ்வரரையும், பிறையணிவாணுதலாள் அம்மனையும், இரண்டாம் பிராகாரத்திலுள்ள நாகராஜரையும் வணங்குவது சிறப்பு.
* கும்பகோணம் நகரின் மையத்திலேயே அமைந்துள்ள நாகேஸ்வரன் கோயிலில், நாகேஸ்வரரும், பெரியநாயகியும் அருள்பாலிக்கிறார்கள். ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.
* மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள பாமணி தலத்தில், சுயம்பு லிங்கமாக அருள்கிறார் நாகநாதர். இறைவி, அமிர்தநாயகி. பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் தோன்றி வழிபட்டதால் பாதாளீச்சரம் என்றும் இக்கோயிலுக்குப் பெயர்.
* கும்பகோணம் அல்லது மயிலாடுதுறையிலிருந்து பேரளம் வழியாக திருப்பாம்புரம் தலத்தை அடையலாம். பாம்புரேஸ்வரரும், வண்டார் பூங்குழலி. இதுவும் ஆதிசேஷன் வழிபட்ட தலம்தான்
* நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ளது நாகூர். இங்கு நாகவல்லி சமேத நாகநாதராக இறைவன் அருள்பாலிக்கிறார். நாகராஜன் பூஜித்து பேறுபெற்ற தலம் இது.
* புதுக்கோட்டைக்கு அருகே, திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது பேரையூர். மூலவர், நாகநாதர். அம்மன், பிரகதாம்பாள்.
* ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் நயினார்கோவில் அமைந்துள்ளது. சௌந்தரநாயகி சமேத நாகநாதராக இங்கு இறைவன் அருள்பாலிக்கிறார்.
* சிவகங்கை மாவட்டம், இளையான்குடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் நாகமுகுந்தன்குடியை அடையலாம். இங்கு நாகேஸ்வரர் மூலவராக அருள் புரிகிறார்.
* சென்னை போரூர் – குன்றத்தூர் பாதையில் கெருகம்பாக்கத்தில் வாசுகி பாம்பு உமிழ்ந்த விஷத்தை உண்ட நீலகண்டேஸ்வரர், ஆதிகாமாட்சி எனும் திருப்பெயர்களோடு இறைவனும், இறைவியும்
அருள்கின்றனர்.
* திருநெல்வேலியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது, கோடகநல்லூர். இங்கு காளத்தீஸ்வரர் எனும் திருநாமத்தோடு இறைவன் அருள்பாலிக்கிறார்.
* வேலூர், வாணியம்பாடிக்கு அருகில் உள்ளது, ஆம்பூர். அபயவல்லி, நாகரத்தினசுவாமியாக இறைவனும், இறைவியும் அருளாசி வழங்குகிறார்கள்.
* ஈரோடுக்கு அருகேயுள்ள கொடுமுடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ளது ஊஞ்சலூர். இத்தலத்தில் நாகேஸ்வரர் மூலவர்.
* காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள தலத்தில், மாகாளன் எனும்நாகம், காளத்திநாதர் ஆணைப் படி இங்கு லிங்கம் அமைத்து பூசித்தது. மூலவர் மகாகாளேஸ்வரர். இது, ராகு – கேது பூஜித்த தலமும் ஆகும்.
