நன்றி குங்குமம் தோழி
*கருவுற்றிருக்கும் ஒரு பெண் நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும், படிக்க வேண்டும், கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லப்படுகிறது.
*கருவிலிருக்கும் குழந்தைக்கு தாயின் மனநிலையை உணரும் சக்தி இருக்கிறது. தாயின் கவலையும் வேதனையும் குழந்தையை பாதிக்கும். தாயின் சந்தோஷம் குழந்தைக்கு உற்சாகத்தை தரும். குழந்தையும் ஆரோக்கியமாய் வளரும்.
*கர்ப்பமாயிருக்கும் பெண் தன்னம்பிக்கை கதைகளை படிக்கலாம். இசையை கேட்கலாம்.
*கர்ப்பிணிப் பெண் மன வருத்தத்துடன் இருப்பதோ, அழுவதோ, கோபம் கொள்வதோ கூடாது. தாயின் உணர்வுகள்
குழந்தையை பாதிக்கிறது. பிறந்த குழந்தைகள் வளர்ந்தவுடன் வழிதவறிப் போவதற்கு அது வயிற்றில் இருக்கும்போது தாய் கொண்ட மனோபாவமும் காரணமாய் அமையலாம் என்று கூறப்படுகிறது.
*கர்ப்பிணிகள் பசியோடு உறங்கக் கூடாது. இரவில் நீண்ட நேரம் கழித்து உண்ணக் கூடாது.
*குடியில்லாத பாழடைந்த மண்டபத்திற்கோ, இல்லத்திற்கோ செல்லக் கூடாது.
தொகுப்பு: டி.லதா, நீலகிரி
