- பூகம்பம்
- விசாகப்பட்டினம்
- திருமலா
- விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்
- சாகர் நகர்
- தாட்டி சேட்லபாலம்
- சீதம்மாதர
- மாதவதாரா
- பெடவல்தாரா
- ஈஸ்ட் பாயிண்ட் காலனி
- ஹெச்பி காலனி
திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் பல இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சாகர் நகர், தாட்டிசெட்லபாலம், சீதாம்மதாரா, மாதவதாரா, பெடவல்தாரா, ஈஸ்ட் பாயிண்ட் காலனி, எச்.பி. காலனி மற்றும் பல இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதனால் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சமடைந்தனர். சில மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் தங்கள் வீடுகளுக்குள் சென்றனர். 4.5 ரிக்டராக பதிவாகியுள்ள இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
