×

பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் காலிறுதியில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்ற ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸ் அரங்கில் நடந்த இப்போட்டியின் 30வது நிமிடத்தில் பேபியன் ரூயிஸ் அபாரமாக கோல் அடிக்க, ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய பெல்ஜியம் அணிக்கு, சார்லஸ் டி கேட்டலேர் 41வது நிமிடத்தில் கோல் போட்டு 1-1 என சமநிலை ஏற்படுத்தினார். இடைவேளை வரை இதே நிலை நீடித்தது.

இரண்டாவது பாதியில் இரு அணிகளின் கோல் கீப்பர்களும் துடிப்பாக செயல்பட்டு பல கோல் வாய்ப்புகளை முறியடிக்க… இழுபறி நீடித்தது. 71வது நிமிடத்தில் பெல்ஜியம் கோல் கீப்பர் திபாட் கோர்ட்டாய்ஸ் காயம் காரணமாக வெளியேற, அவருக்கு பதிலாக சென்னி லேமன்ஸ் பொறுப்பேற்றார். 86வது நிமிடத்தில் ஸ்பெயினின் டானி ஒல்மோவுக்கு மாற்று வீரராக உள்ளே வந்த மைகேல் மெரினோ 88வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

குபார்ஸி அடித்த ஷாட்டை தடுக்க முயன்றபோது பெல்ஜியம் கோல் கீப்பர் லேமன்ஸ் கையில் இருந்து நழுவி வந்த பந்தை மெரினோ மின்னல் வேகத்தில் வலைக்குள் திணித்தார். பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஸ்பெயின் நட்சத்திரம் லாமின் யமால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஜூலை 15ம் தேதி டாலஸ் அரங்கில் நடைபெற உள்ள முதலாவது அரையிறுதியில் பிரான்ஸ் ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Tags : Spain ,Belgium ,Los ,Angeles ,World Cup ,Fabian Ruiz ,Los Angeles Arena… ,
× RELATED இந்திய அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!..