×

மாற்று வீரர் மெரினோவின் மகத்தான சாதனை!

ரவுண்ட் ஆப் 16 மற்றும் காலிறுதியில் ஸ்பெயின் அணிக்காக கடைசி நிமிடங்களில் மாற்று வீரராகக் களமிறங்கி வெற்றி கோல்களை அடித்த மைகேல் மெரினோ பிபா உலக கோப்பை வரலாற்றில் மகத்தான சாதனை வீரராக முத்திரை பதித்துள்ளார்.

ஒரே உலக கோப்பை தொடரின் 2 நாக் அவுட் போட்டியில் வெற்றி கோல் அடித்த முதல் மாற்று வீரர் மெரினோ (30 வயது) மட்டுமே. ரவுண்ட் ஆப் 16ல் போர்ச்சுகல் அணிக்கு எதிராக இன்ஜுரி டைமில் கோல் அடித்து அசத்திய அவர், பெல்ஜியம் அணிக்கு எதிராக நடந்த காலிறுதியில் 86வது நிமிடத்தில் களமிறங்கி 88வது நிமிடத்தில் கோல் போட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Merino ,Michael Merino ,Spain ,16 ,FIFA World Cup ,World Cup ,
× RELATED இந்திய அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!..