வியட்நாமில் படகு விபத்தில் இறந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறியிருபதாஹ்வது; படகில் பயணித்த இந்திய சுற்றுலா பயணிகள் 32 பேரில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியத் தூதரகம் தயாராக உள்ளது. நிலைமையை இந்திய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
