×

75 ஆண்டுகளுக்கு பின் மிக கொடூரமான எல் நினோ.! அமெரிக்க காலநிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…

வாஷிங்டன்: பசிபிக் பெருங்கடலில் உருவான எல் நினோ கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத மிக வலிமையான நிகழ்வாக இருக்க கூடும் என அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் எச்சரித்து உள்ளது. இந்த ஆண்டு உருவாகியுள்ள எல் நினோ, கடந்த 1950-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட மிக வலுவான வரலாற்றுச் சிறப்புமிக்க “சூப்பர் எல் நினோ” (Super El Niño) நிகழ்வுகளில் ஒன்றாக மாறக்கூடும்.

தொடர்ந்து வலுப்பெற்று வரும் எல் நினோ இந்தாண்டு இறுதிக்குள் மேலும் தீவிரமடையும் என்றும், 2027-ஆம் ஆண்டின் முற்பகுதி வரை நீடிப்பதற்கு 97% வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இந்த நிகழ்வின் முக்கிய அடையாளமான, இயல்பை விட 1 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை, மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பகுதி முழுவதும் பரவியுள்ளதாகவும் அமெரிக்க மையம் கூறி இருக்கிறது. மிகவும் தீவிரமான ‘எல் நினோ’ நிகழ்வுகள் கூட எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. சமீபத்திய எல் நினோ நிகழ்வு, இந்தியாவில் பருவமழை பாதிப்புகளையும், வறட்சியையும் மற்றும் அமெரிக்காவில் கடுமையான மழைப்பொழிவையும் ஏற்படுத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட மிக அதிவேகமாக அதிகரித்து வருகிறது. சிலகணிப்புகளின்படி, இந்த வெப்பநிலை இயல்பை விட 3°C வரை அதிகரிக்க கூடும். இதனால் 2026 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகள் பூமியின் மிக வெப்பமான ஆண்டுகளாக மாறி, புதிய உலக வெப்ப சாதனை படைக்கலாம் எனவும் நிபுணர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

 

Tags : El Niño ,US Climate Center ,Washington ,U.S. Climate Prediction Center ,Pacific Ocean ,
× RELATED ரஷ்யா–ஈரான் ரகசிய ஒத்துழைப்பு?...