- விநாயகர் கோயில்
- Kumbabhishekam
- பொன்னேரி
- கருப்பக விநாயகர் கோயில்
- முரளி நகர்
- Meenjur
- கணபதி
- ஹோமம்
- நவக்கிரக
- லட்சுமி ஹோமம்
- போ பூஜா
- அஷ்டதாசா
பொன்னேரி, ஜூலை 10: மீஞ்சூர் முரளி நகர் பகுதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கிராமதேவதை வழிபாடுடன் தொடங்கிய கும்பாபிஷேக நிகழ்ச்சியானது கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லஷ்மிஹோமம், கோபூஜை, அஷ்டாதச க்ரியைகள், கண்திறத்தல், தீபாராதனை விநாயகர் பிரதிஷ்டை பிரசாதம் வழங்கப்பட்டது.
இரண்டு கால யாக பூஜையுடன் பூர்ணாஹூதி நடைபெற்று கடம்புறப்பட்டது. பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது பட்டாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கும் கற்பக விநாயகர் ஆலய பரிவாரங்களுக்கும் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் தீபாராதனை நடந்து சுவாமி பிரசாதமும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் மீஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
