ஒப்பந்த பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்

 

கோவை: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிளம்பிங், கிச்சன் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் புதிய ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்ட நிலையில் ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை, இஎஸ்ஐ, பிஎப் இதுவரை தங்களது கணக்கில் கட்டவில்லை என குற்றஞ்சாட்டி இன்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மேட்டுபாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: