×

நம் கொள்கை முன்னோர்கள் நமக்குத் பெற்றுத் தந்த உரிமைகளை உயிரெனக் காப்போம்..! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவு

சென்னை: நம் கொள்கை முன்னோர்கள் நமக்குத் பெற்றுத் தந்த உரிமைகளை உயிரெனக் காப்போம் என பனகல் அரசர் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது சமூக வலைதள பதிவில்:
“தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்” எனத் தந்தை பெரியாரால் போற்றப்பட்ட பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!

பனகல் அரசர் குறித்த புத்தகமே முத்தமிழறிஞர் கலைஞருக்கு அரசியலில் ஆர்வத்தை விதைத்தது.

சமூகநீதியின் அடித்தளமான வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை, இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயமில்லை என்ற உத்தரவு எனத் தமது ஆட்சிக்காலத்தில் அவர் செய்த சாதனைகள்தாம் நம் திராவிட மாடலுக்கு அடிப்படை!

நம் கொள்கை முன்னோர்கள் நமக்குத் பெற்றுத் தந்த உரிமைகளை உயிரெனக் காப்போம்! என கூறியுள்ளார்.

Tags : Dimuka Dhawar Mu. K. Stalin ,Chennai ,King Panakal ,President of the Republic of ,India ,K. Stalin ,
× RELATED அனல் மின் நிலையத்திற்கான ரூ.3 கோடி...