- கப்தடோரி
- எல்லண்டி
- எலகண்டி
- நீலகிரி மாவட்டம்
- ஓட்டி-இத்தலர்
- கபதோரை
- போர்டியாடா
- காகன்ஜி காலனி
- மோட்ரோரய்
- நரிகுஜியாடா
- விபிஎன்
- நஞ்சநாடு அரசு உயர்நிலைப்பள்ளி
ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி-இத்தலார் சாலையில் உள்ள எல்லக்கண்டி பகுதியில் இருந்து போர்த்தியாடா, கக்கன்ஜி காலனி, மொட்ரோரை, நரிகுழியாடா, விபிஎன் வழியாக கப்பத்தோரை பகுதிக்கு சாலை உள்ளது.
இச்சாலையை பயன்படுத்தி அருகில் உள்ள நஞ்சநாடு அரசு மேல்நிலை பள்ளிக்கு மாணவ, மாணவியர்கள் சென்று வருகின்றனர். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இச்சாலை வழியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
அதன்பின் முன்னறிவிப்பின்றி பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனிடையே இச்சாலை பராமரித்து பல ஆண்டுகளான நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சூழலில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இச்சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.
மேலும் சாலையின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்களில் இருந்து அடித்து வரப்படும் மண் சாலையில் குவிந்து சேறும்,சகதியுமாக மாறியுள்ளது. இதனால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு நடந்து செல்ல கூடிய மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே இச்சாலையை செப்பனிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
