சென்னை: துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்ப்பதற்கு திமுக எம்பி. பி.வில்சன் கண்டனம் தெரிவித்துள்ளது. யுஜிசி உறுப்பினரை சேர்ப்பது மாநில உரிமைகளை காவு கொடுப்பதாக அமையும். குஜராத்தில் கூட மாநில முதல்வர்தான் பல்கலை. வேந்தராக இருக்கிறார். அரசியல் சட்ட அறிவு இருந்தால் யுஜிசி பிரதிநிதியை ஏற்க மாட்டார்கள். பல்கலைக்கு துணைவேந்தரை நியமிப்பது மாநில அரசின் அதிகாரம் என பி.வில்சன் தெரிவித்தார்.
