×

மின்வயர்கள் திருட்டு

 

தேவதானப்பட்டி, ஜூலை 8: தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற செயலராக கணபதி(45) என்பவர் வேலை செய்து வருகிறார். எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு வேட்டுவன்குளம் கண்மாய் அருகே இருந்து குடிநீருக்காக போர்வெல் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் அந்த குடிநீர் மின்மோட்டாரை இயக்குவதற்காக சென்ற போது அதில் இருந்த 45 மீட்டர் மின்மோட்டார் வயரை மர்மநபர்கள் வெட்டி எடுத்துச்சென்றது தெரியவந்தது. இது குறித்து கணபதி ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags : Devadhanapatti ,Ganapathy ,Yerumalainayakkanpatti Panchayat Council ,Yerumalainayakkanpatti Panchayat ,Vettuvankulam Kanmai ,
× RELATED வீடு கட்டுவதற்கு ரூ.50,000 மாமூல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டல்