×

திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

 

மன்னார்குடி, ஜூலை 8: இந்தியாவில் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை முன்னிட்டு, திருவாரூர் மாவட் டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறை சார்பில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், மாவட்டம் முழுவதும் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துல்லியமாக நடைபெறுவதற்காக கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் பெயர், வயது, கல்வி, தொழில், குடும்ப விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் அரசின் திட்டமிடல், வளங்கள் ஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதற்கு தேவையான தரவுகள் சேகரிக்கப்படும்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் விரைவில் தொடங்கி யுள்ளன. இதற்காக 40 கள பயிற்றுநர்கள், 323 மேற்பார்வையாளர்கள், 2034 மக்கள் தொகை கணக்கிட்டாளர்கள் ஆகியோர் கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர். இதற்காக 20 பொறுப்பு அலுவலகங்கள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.

Tags : Tiruvarur district ,Mannargudi ,India ,
× RELATED வீடு கட்டுவதற்கு ரூ.50,000 மாமூல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டல்