- ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள்
- TNPSC
- சென்னை
- தமிழ்நாடு பொதுச் சேவை ஆணையம்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் துறை
சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் 839 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆண்டு அட்டவணையில் தெரிவித்திருந்தபடி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள பணிப்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் மற்றும் சாலை ஆய்வாளர் உள்ளிட்ட 56 பதவிகளுக்கான 839 காலிப் பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வை அறிவித்துள்ளது.
விருப்பமுள்ள தேர்வர்கள் வருகிற 17ம் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 15ம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம். ஓஎம்ஆர் கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் தெரிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
