×

12 மணி நேரத்தில் 31 செமீ கொட்டி தீர்த்த மழை.! வெள்ளத்தில் மிதக்கும் சூரத்

சூரத்: குஜராத் மாநிலத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் சூரத் நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. வெள்ளம் வடியாத காரணத்தால் சூரத் நகரின் பல இடங்களில் சாலைகள் ஆறு போல காட்சியளிக்கிறது. குறுகிய நேரத்தில் கொட்டிய கனமழையால் சூத்த நகரம் முழுவதையும் வெள்ளம் சூழந்து உள்ளது. இந்த நகரில் கடந்த 12 மணி நேரத்தில் சுமார் 32 செமீ மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் சூரத் நகரம் ஸ்தம்பித்ததுடன், இருவர் உயிரிழந்துள்ளனர்.

சூரத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அதீத மழையால் நகரின் முக்கிய கால்வாய்கள் நிரம்பி வழிந்து, குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சூரத் நகரின் கத்தர்காம், வராச்சா, ரந்தேர், வேசு மற்றும் புனா பாட்டியா உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மேலாண்மை குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சூரத் நகருக்கு அருகில் உள்ள பல்சானா, காம்ரேஜ் ஆகிய பகுதிகளிலும் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடைகள் மற்றும் அடித்தளங்களில் வெள்ளம் புகுந்ததால், சூரத் ஜவுளி வர்த்தகர்கள் சங்கம் (FOSTA) அனைத்து ஜவுளி சந்தைகளையும் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

Tags : SURAT ,Gujarat ,Surat Nagar ,Sutta ,
× RELATED 2026-ஆம் ஆண்டில் உலகில் வாழ்வதற்கு மிகவும் சிறந்த No.1 நகரம் இதுதான்.!!