×

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதியில் கோகோ காப், சின்னர்

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு நேற்று நடந்த காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, கோகோ காப் மோதினர். முதல் செட்டை பெகுலா 6-4 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், அடுத்த 2 செட்டை 6-3, 6-3 என கைப்பற்றி கோகோ காப் அரையிறுதி முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் யான்-லெனார்ட் ஸ்ட்ரஃப் ஆகியோர் மோதினர். இருவரும் போட்டு போட்டு ஆடியதால் முதல் செட்டை யார் கைப்பற்ற போவார் என எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இறுதியாக சின்னர் 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். 2வது செட்டிலும் கடும் போட்டி நிலவிய நிலையில், 7-6 என்ற கணக்கில் சின்னரே கைப்பற்றினார். போட்டியை தீர்மானிக்கும் 3வது செட்டை 6-3 என்ற கணக்கில் சின்னர் எளிதில் வென்று அரையிறுதி முன்னேறினார்.

இதேபோல், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடிய நம்பர் 2 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-4, 7-5, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் செக் குடியரசு வீரரான ஜிரி லெஹெக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் நம்பர் 1 ஜோடியான பிரிட்டனின் ஹென்றி பாட்டன், பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா ஜோடியும் பிரான்சின் மானுவல் கினார்ட், அர்ஜெண்டினாவில் கைடோ ஆண்ட்ரியோஸி ஜோடியும் மோதின. இதில் நம்பர் ஜோடி 2-6, 6-4, 7-6 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதேபோல், அமெரிக்காவின் அலெக்சாண்டர் கோவாசெவிக், ஆஸ்திரேலியாவின் தானாசி கொக்கினாகிஸ் கோடியும் அரையிறுதிக்கு முன்னேறியது.

Tags : Coco Gabb ,Sinner ,Wimbledon Tennis Semifinals ,London ,Wimbledon Grand Slam ,Jessica Pegula ,Pegula ,
× RELATED இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!..