- பணிக்குழு
- போதைப்பொருள் கடத்தலைத்
- இந்தியா
- பிரிக்
- கவதி
- கோவுகம், அசாம்
- அனுராக் கார்க்
- தலைமை நிர்வாக அதிகாரி
- இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம்
கவுகாத்தி: பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு அமைப்புகளின் தலைவர்களின் 2 நாள் கூட்டம் அசாமின் கவுகாத்தில் நேற்று தொடங்கியது. இதில், இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் தலைமை இயக்குநர் அனுராக் கார்க் பங்கேற்று பேசுகையில், ‘‘நவீன மற்றும் மிகவும் நுட்பமான கடத்தல் முறைகளின் வருகையால் போதைப் பொருள் அச்சுறுத்தல் உலகளாவிய ஆபத்தமாக மாறிவிட்டது.
வேகமாக மாறிவரும் இப்போக்குகளை கையாள பிரிக்ஸ் அமைப்பின் பிரத்யேக மெய்நிகர் பணிக்குழுவை அமைக்க பரிந்துரைக்கிறேன். இந்த அமைப்பு தொடர்ந்து சந்திப்பதற்கும், உடனுக்குடன் உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும், கடத்தல் முறைகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்வதற்கும் முக்கிய தளமாக செயல்படும்’’ என்றார்.
பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
