×

மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டை புதுப்பித்து வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு

 

திருவள்ளூர், ஜூலை 3: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதாவிற்கு, வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவர் லிவிங்ஸ்டன் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் அடையாள அட்டை புதுப்பித்து வழங்கப்படுகிறது. ஆனால், இதுவரை சரியான முறையில் அடையாள அட்டை வழங்கப்படாமல், மாற்றுத்திறனாளிகள் அலைகழிக்கப்படுகிறார்கள். இதனால், கிராமங்களில் இருந்து வரவழைக்கப்படும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் முகாமில் 50 நபர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை புதுப்பித்து தரப்படுகிறது.

மீதம் வரும் மாற்றுத்திறனாளிகள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதனால், மாற்றுத்திறனாளிகள் மன உளைச்சல் அடைகிறார்கள். ஒவ்வொரு மாதமும் முகாமிற்கு வரும் பொழுதும் ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரம் வரை செலவழித்து மாற்றுத்திறனாளிகள் வந்து செல்கின்றனர். அது மட்டுமில்லாமல் அதிகாரிகள் தரக்குறைவாக பேசுவதினால், மாற்றுத்திறனாளிகள் மன உளைச்சல் அடைகிறார்கள். எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து வரக்கூடிய மாற்றத்திறனாளிகள் அனைவருக்கும் அடையாள அட்டை உடனடியாக வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags : Thiruvallur ,Livingston ,Vasantham Disabled Persons Association ,Thiruvallur District ,Collector ,Kavitha ,Tiruvallur Government Medical College Hospital ,
× RELATED வீடு கட்டுவதற்கு ரூ.50,000 மாமூல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டல்