×

தோட்டங்களுக்குள் வன விலங்குகள் ‘விசிட்’

 

வருசநாடு, ஜூலை 1: வருசநாடு அருகே நீர்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை, அரசரடி, பாலாறு, பொம்மியாறு, போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே போதிய மழை இல்லாமல் மூல வைகை ஆறு வரத்து குறைந்து காணப்படுகிறது. மேலும் வனவிலங்குகள் குடிநீர் குடிப்பதற்கு மூல வைகை ஆற்றுக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த சில தினங்களாகவே மூல வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது.

சில இடங்களில் முற்றிலும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் தோட்டங்களுக்குள் வன விலங்குகள் தண்ணீர் குடிக்க வருகை தருகின்றன. இதனை தடுப்பதற்கு அரசு மற்றும் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Varusanadu ,Vellimalai ,Arasaradi ,Palaru ,Bommiyaru ,Vaigai river ,
× RELATED வீடு கட்டுவதற்கு ரூ.50,000 மாமூல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டல்