×

காஸ் கசிவால் பாதிக்கப்பட்ட அசாம் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

 

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 68 பேர் 2ம் கட்டமாக அசாம் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21ம் தேதி திடீரென அமோனியா காஸ் வெளியேறியது. அப்போது பணில் இருந்த வடமாநிலத்தவர்கள் வாயு கசிவால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தனர். உடனே அவர்களை சக தொழிலாளர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மஞ்சங்காரணை, செங்குன்றம் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக 20 பேர் சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதை தொடர்ந்து ஸ்டான்லி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மஞ்சங்காரணை, செங்குன்றம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற ஒடிசா மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பெரியபாளையம் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட 146 பேரில், முதல்கட்டமாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 59 பேரை பஸ் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்களது சொந்த ஊருக்கு ரயில் மூலம் ஒடிசா மாநில அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

இதேபோல் நேற்று அசாம் மாநிலத்தை சேர்ந்த ஆண்கள் 44, பெண்கள் 24 என மொத்தம் 68 தொழிலாளர்களை அம்மாநில அதிகாரிகள் மாநகர பஸ் மூலம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களை திருவள்ளூர் ஆர்டிஒ ரவிச்சந்திரன், ஊத்துக்கோட்டை தாசில்தார் ராஜேஷ்குமார், பிடிஒ அற்புதராஜ் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.

Tags : Assam ,Uthukottai ,Kannikaiper ,Periypalayam ,
× RELATED தென்காசியில் பெண்ணுக்கு பாலியல்...