×

கொள்ளிடம் அருகே மாதானம் கடைவீதியில் 10 வருடங்களாக ஒளிராத உயர்கோபுர மின் விளக்குகள்

 

கொள்ளிடம், ஜூன் 29: கொள்ளிடம் அருகே மாதானம் கடைவீதியில் 12 வருடங்களுக்கும் மேலாக பழுதடைந்து கிடக்கும் உயர்கோபுர மின்விளக்குகள் சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து புதுப்பட்டினம் மற்றும் பழையாறு மீன்பிடி துறைமுகம் செல்லும் நெடுஞ்சாலையில் மாதானம் கடைவீதியில் சாலைகள் சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்குகள் கடந்த 12வருடங்களுக்கு முன்பு புதியதாக அமைக்கப்பட்டது. 6 மாத காலம் மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருந்த இந்த மின்விளக்குகள் பிறகு பழுதாகி விட்டன. அதற்குப் பிறகு இந்த உயர் கோபுர மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.மாதானம் கடைவீதி பகுதி முக்கிய போக்குவரத்தில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்திலும் மிகவும் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோயில் மற்றும் பசுபதீஸ்வரர் கோயில் அமைந்துள்ள பகுதியிலும் குடியிருப்புகள் மற்றும் வியாபார கடைகள் அமைந்த இடத்திலும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்திலும் இருந்து வருகிறது.

மேலும் அங்கு புறக்காவல் நிலையம் ஒன்றும் உள்ளது. இந்த மின்விளக்குகள் ஒளிராமல் இருந்து வருவதால் இரவு நேரங்களில் அப்பகுதி இருண்டு காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சமூக விரோத செயல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்பகுதியில் நடந்து செல்பவர்களும் இரவு நேரங்களில் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே 12 வருடங்களுக்கும் மேலாக பழுதடைந்துள்ள உயர் கோபுர மின் விளக்குகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : Mathanam shop ,Maanam ,Pudupatnam ,Old Fishing Port ,Puttur ,Mayiladuthura District ,
× RELATED வீடு கட்டுவதற்கு ரூ.50,000 மாமூல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டல்