லண்டன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவிய இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன் குவித்தது. மந்தனா 38, ஷபாலி, ஜெமிமா தலா 34, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 56 ரன் (27 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.
171 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 19 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து வென்றது. எல்லிஸ் பெர்ரி 56, ஆஷ்லே கார்ட்னர் 53* ரன் விளாசி வெற்றிக்கு உதவினர். கட்டாய வெற்றி என்ற நெருக்கடியுடன் களமிறங்கிய இந்தியா, அரையிறுதி வாய்ப்பை பறிகொடுத்தது.
