×

லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து: டிரைவர் காயம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் தனியார் பேருந்து ஒன்று கவரப்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது அதே வழியில் 10 டன் இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து மோதியது. இதில் லாரியில் இருந்த கம்பிகள் பேருந்து கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்ததால் ஓட்டுநர்ர் வெங்கடேசனுக்கு சிறு காயம் ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த கவரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய லாரி மற்றும் பேருந்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : KUMMIDIPUNDI ,CHENNAI-KOLKATA NATIONAL HIGHWAY ,PUDUVAI ,Kawarappetta ,Chennai ,
× RELATED சென்னையில் பிரபல ரவுடி செல்லா என்ற...