×

உத்தர பிரதேச மாநிலத்தில் காவல் நிலையத்தில் பெண் ஊழியருடன் போலீஸ்காரர் நெருக்கம்: வீடியோ வைரலானதால் சஸ்பெண்ட்

ஜாலான்: உத்தரபிரதேசத்தில் காவல் நிலையத்தின் உள்ளேயே பெண் ஊழியருடன் அநாகரீகமாக நடந்து கொண்ட போலீஸ் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் ஜாலான் மாவட்டத்தில் உள்ள ஓரை கொத்வாலி காவல் நிலையத்தின் கம்ப்யூட்டர் அறையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 2 நிமிடங்களுக்கும் மேலாக ஓடும் அந்த வீடியோவில், காவல் நிலையத்தில் பணியில் இருந்த அரவிந்த் என்ற கான்ஸ்டபிள், அங்கு வந்த ஒரு பெண்ணுடன் மிகவும் அநாகரீகமான முறையில் நடந்து கொள்வது பதிவாகியிருந்தது.

உத்தரபிரதேச போலீசார் துறையுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் அந்த பெண்ணுடன், நாற்காலியில் அமர்ந்திருந்த அரவிந்த் அநாகரீகமாக ஈடுபடும் காட்சிகள் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி, பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை கிளப்பியது. இந்த விவகாரம் ஜாலான் மாவட்ட எஸ்பி வினய் குமார் சிங் கவனத்திற்கு வந்ததை அடுத்து, அவர் நேற்று கான்ஸ்டபிள் அரவிந்தை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து எஸ்பி உத்தரவிட்டார். இதுகுறித்து ஓரை சரக அதிகாரி ராஜேஷ் வர்மா கூறுகையில், ‘கான்ஸ்டபிள் அரவிந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வீடியோவில் இடம்பெற்றுள்ள பெண்ணின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அந்த பெண்ணின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Tags : Uttar Pradesh ,Orai Kotwali police station ,Jalan district of Uttar Pradesh ,
× RELATED போலி மருந்துகளின் புழக்கத்தைத்...