பெரம்பூர், ஜூன் 25: கொடுங்கையூரில் வீட்டில் பீரோவில் இருந்த 19 சவரன் தங்க நகைகள் மாயம் போலீசார் விசாரணை கொடுங்கையூர் ஆர்.வி.நகர் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரி (46), தனியார் தொண்டு நிறுவனத்தில் இயக்குனராக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மேலும் இரண்டு வளர்ப்பு மகள்களும் உள்ளனர். கடந்த 7ம் தேதி பிரோவில் உள்ள 19 சவரன் தங்க நகைகளை கடைசியாக பார்த்துவிட்டு சுந்தரி பீரோவில் வைத்தார். நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் மீண்டும் பீரோவில் இருந்த நகைகளை பார்த்தபோது 19 சவரன் தங்க நகைகளை காணவில்லை.
வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்படாமல் நகைகள் மட்டும் மாயமாகி உள்ளது. மேலும் சுந்தரி வீட்டில் உறவினர் பெண் ஒருவர் வந்து தங்கி இருந்ததாகவும் அவர் வந்து சென்ற பின்பு நகைகள் காணவில்லை எனவும் அவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் சுந்தரி போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
